இளைஞர் போக்சோவில் கைது pt desk
குற்றம்

நீலகிரி | பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது

கூடலூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: மகேஷ்வரன்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வசித்து வருபவர் நிஷாந்த் (22). இவர், 16 வயது பள்ளி மாணவியுடன் சில மாதமாக பழகி வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

arrest

இதையடுத்து அந்த மாணவி, தனது உறவினர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், இளைஞர் நிஷாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.