செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவல் சரக எல்லைக்குட்பட்ட நத்தம் பெட்ரோல் பங்க் அருகே போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டைகளுடன் வந்த இரண்டு நபர்களை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது ஐந்து சாக்கு மூட்டைகளில் 45 கிலோ எடை கொண்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட ரமேஷ், குமரகுரு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.