கடத்தி பறிமுதல் போலி நிருபர் கைது pt desk
குற்றம்

மயிலாடுதுறை | ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் - தப்பிக்க முயன்ற போலி நிருபர் கைது

மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல். அடையாள அட்டையை காட்டி தப்பிக்க முயன்ற போலி நிருபரை போலீசார் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.மோகன்

கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்த ரயில்வே இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் வன்னியபெருமாள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, திருச்சி உட்கோட்ட டிஎஸ்பி சக்கரவர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கச்சிக்குடாவில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு விரைவு வண்டியில் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, பயணிகள் இருக்கையின் கீழ் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேக்குகளை போலீஸார் சோதனையிட்டனர். அந்த பைகளில் தலா 8 கிலோ வீதம் மொத்தம் 16 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை அடங்கிய பைகளை கைப்பற்றி, அந்த சீட்டில்; பயணம் செய்த முத்துசெல்வம் (33) என்பவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் நாளிதழ் ஒன்றில் நிலக்கோட்டை தாலுகா நிருபராக பணியாற்றுவதாக அட்டையை காட்டியுள்ளார்.

ஆனால், போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அவர் அது தன்னுடைய பை என்பதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை, நாகப்பட்டினம் போதைப்பொருள் மற்றும் நுண்ணறிவு பிரிவு வசம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.