செய்தியாளர்: எஸ்.காதர் மொய்தீன்,
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பெரியம்மாள் (70). இவர் இன்று பாரதியார் நகரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்குச் சென்று விட்டு அரசு பேருந்தில் மணப்பாறைக்கு வந்துள்ளார். அப்போது பேருந்தில் டிப்டாப்பாக வந்த இரு பெண்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை பறித்துள்ளனர்.
இதைக் கண்ட சக பெண்கள் சத்தமிடவே இரு பெண்களும் நைசாக தப்ப முயன்றுள்ளனர். உடனடியாக அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சர்பட் ராயப்பன் மற்றும் பாலகுமரன் ஆகிய இருவரும் தப்பிச ;செல்ல முயன்ற இரு பெண்களையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில், இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரிதமாக செயல்பட்டு இரு பெண்களையும் மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுனர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் மணப்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.