மதுரை | தொழிலதிபர் கடத்தல் வழக்கு - ஆறு பேர் கைது
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரையில் தொழிலதிபர் சுந்தர் என்பவர் கடந்த 14-ஆம் தேதி கடத்தப்பட்டார், இது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிந்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து காவல்துறையினர் 9 பேரை பிடித்து விசாரணை செய்து வந்தனர். இதில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மரியராஜ் உட்பட 6 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இந்த கடத்தல் வழக்கு தொடர்பாக பலரை போலீசார் தேடி வருகின்றனர். தொழிலதிபர் சுந்தரத்திற்கும் மரியராஜ{க்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த கடத்தல் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
மரியராஜ் காவல்துறையிடம் எந்த தகவலையும் முழுமையாக கூறவில்லை, அவர் வாய் திறந்து பேசும் பட்சத்திலேயே இந்த கடத்தல் வழக்கில் முழுமையான விவரங்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.