மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் pt desk
குற்றம்

மதுரை | குடும்ப பிரச்னையில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் தப்பியோட்டம்

மதுரையில் குடும்ப பிரச்னையில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாண்டிச்செல்வி - கருப்பசாமி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருப்பசாமி, மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர், அடிக்கடி மது அருந்தி வருவதால் கணவன் மனைவி இடையே நீண்ட நாளாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் குடும்ப பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை திடீரென கத்தியால் மனைவியை குத்திக் கொலை செய்த கருப்பசாமி, அங்கிருந்த தப்பியோடினார். இதையடுத்து செல்வியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக திடீர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிநிது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாண்டிச் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து தப்பியோடிய கணவர் கருப்பசாமியை தேடி வரும் திடீர் நகர் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.