நீலகிரி | குடும்பத் தகராறில் கணவரை தீ வைத்துக் கொன்றதாக மனைவி கைது
செய்தியாளர்: மகேஷ்வரன்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள அட்டி பகுதியைச் சேர்த்தவர் முரளி. இவர், அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி விமலாராணி வேறு ஒரு ஆண் நண்பருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த கணவர் முரளி அவரை எச்சரித்துள்ளார்.
இதனால் நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த விமலாராணி, முரளி மீது தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே நடந்த சம்பவம் குறித்து உயிரிழந்த முரளி அளித்த வாக்குமூலத்தில் உண்மை தெரியவந்ததை அடுத்து இது தொடர்பாக மனைவி விமலரணியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.