செய்தியாளர்: செ.சுபாஷ்
கிருஷ்ணகிரியில் இருந்து கண்டெய்னர் லாரியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து சிலர் மதுரைக்கு கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பெயரில் மதுரை சர்வேயர் காலனி 120 அடி ரோடு பகுதியில் புதூர் காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி தலைமையில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோழி தீவனம் கொண்டுவந்த கண்டெய்னர் லாரியில் மறைத்து வைத்து தடை செய்யப்பட்ட 94 மூட்டையில் இருந்த 1400 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கடந்தி வந்த கண்டெய்னர் லாரி மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.