செய்தியாளர்: ரமேஷ்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியில் காவல்துறை ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செட்டிக்குளம் பகுதியில் பார்த்திபன் என்பவருக்குச் சொந்தமான பலசரக்கு கடை குடோனில், பதுக்கி வைத்திருந்த 655 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கடையின் உரிமையாளர்களான மாதவன் (55) , பார்த்திபன் (45) ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தின் எல்லை பகுதியாக உள்ள கொட்டாம்பட்டி, பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் புகையிலை பொருட்கள் அதிகளவு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் இப்பகுதியில் காவல்துறையினர் அதிகளவு சோதனை மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.