அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது pt desk
குற்றம்

கும்பகோணம் | பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

கும்பகோணம் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: கு.விவேக்ராஜ்

கும்பகோணம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (56), இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளி முடிந்து மாலை நேரங்களில் ஏழை மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து மாணவியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ரமேஷை காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.