காவல் ஆய்வாளர் மீது கல்வீசி தாக்கு pt desk
குற்றம்

கிருஷ்ணகிரி | காவல் ஆய்வாளர் மீது கல்வீசி தாக்கு... மண்டை உடைப்பு – 13 பேர் கைது

ஊத்தங்கரை அருகே காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் மீது கல்வீசி நடத்திய தாக்குதலில் மண்டை உடைந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: K.அரிபுத்திரன்

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரெட்டிபட்டி கிராமத்தில் நேற்று மாலை திருவிழா நடைபெற்றது. அப்போது, அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் மீது பட்டாசு வெடிக்கப்பட்டது. பட்டாசு பஸ்ஸின் கண்ணாடி மீது விழுந்து உடைந்ததில், பேருந்தில் இருந்த இரண்டு குழந்தைகள் மீது கண்ணாடித் துண்டுகள் பட்டு லேசான காயங்கள் ஏற்பட்டது.

Arrested

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்லாவி காவல் நிலைய ஆய்வாளர் ஜாபர் உசேன், பட்டாசு வீசிய அதே கிராமத்தைச் சேர்ந்த தென்னரசு என்பவரை கைது செய்து ஆனந்தூர் சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தார். அங்கு வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர், ஆய்வாளர் ஜாபர் உசேன் தலையில் கல் வீசியதாகக் கூறப்படுகிறது இத்த தாக்குதலில் ஆய்வாளரின் மண்டையில் காயம் ஏற்பட்டு, நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஏ.ரெட்டிபட்டி கிராமத்தில் அடிதடி நடக்கும் வீடியோ மற்றும் காவல் ஆய்வாளர் மண்டை உடைப்பு ஏற்பட்டு ஓடிவரும் வீடியோ காட்சிகள் இன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.