செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, பஞ்சாட்சசிபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில், ஆய்வாளர் கணேஷ் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை இட்டதில், கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காரை ஓட்டி வந்த காந்தி நகரைச் சேர்ந்த ஜெயசிம்மா (36) மற்றும் கொரட்டகிரி கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் ,(40) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் இரண்டு பேரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்ததை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.