வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் திருட்டுpt desk

கோவில்பட்டி | பட்டப் பகலில் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் திருட்டு! ஆசிரியை வீட்டில் கைவரிசை!

கோவில்பட்டியில் பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Published on

செய்தியாளர்: மணிசங்கர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் கல்கி தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தலீலா. இவர் வெயிலுக்கு கந்தபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த அனைவரும் வேலைக்குச் சென்று விட்டனர். இதையடுத்து மாலையில் பள்ளி முடிந்து அமிர்தலீலா வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார்.

வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் திருட்டு
திண்டுக்கல் | பாஜக - சிபிஎம் இடையே கைகலப்பு... மண்டை உடைப்பு சம்பவத்தால் போலீசார் குவிப்பு

அப்போது, வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகைகள் திருடு போனது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com