ரவுடி போக்சோவில் கைது pt desk
குற்றம்

கன்னியாகுமரி |16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ரவுடி போக்சோவில் கைது

கன்னியாகுமரி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரவுடியை போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: S.சுமன்

கன்னியாகுமரி வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்ற அரவிந்த் (26). பிரபல ரவுடியான இவர் மீது வெள்ளிச்சந்தை மற்றும் இரணியல் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

இதையடுத்து அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த வாரம் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த சிறுமியை வழிமறித்த ரவுடி அரவிந்த் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார், அரவிந்த் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.