தப்பியோடிய கைதி - 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைதுpt desk
தமிழ்நாடு
வேலூர் | மத்திய சிறையில் இருந்து தப்பியோடிய கைதி - 3 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடிய கைதி 3 ஆண்டுகளுக்குப் பின் தனிப்படை போலீசார், பெங்களுாரில் வைத்து கைது செய்தனர்.
செய்தியாளர்: ச.குமரவேல்
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியைச் சேர்ந்த காசி என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த நந்தா (எ) முத்துக்குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு வேலூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடினார்.
arrestPT DESK
இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகத்தினர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கைதி நந்தா (எ) முத்துக்குமாரை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் இன்று பெங்களுாருவில் வைத்து கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்த நபரை பாகாயம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.