படப்பை குணா அதிரடி கைது pt desk
குற்றம்

காஞ்சிபுரம் | தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு - கொலை முயற்சி வழக்கில் ரவுடி படப்பை குணா கைது

சுங்குவார்சத்திரம் அருகே விளைநிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறு கொலை முயற்சி வழக்கில் பிரபல ரவுடி படப்பை குணா அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: கோகுல்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுார் மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மதுரமங்கலம் கிராமத்தில் நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரை குணா மிரட்டியதோடு, அவரை தாக்கியதாக குணா மீது சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சுங்குவார்சத்திரம் போலீசார், ரவுடி குணா மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்