இருவர் கைது pt desk
குற்றம்

ஈரோடு | மூதாட்டியை தாக்கி 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற வழக்கு - இருவர் கைது

ஈரோடு அருகே மூதாட்டியின் தலையில் கல்லால் தாக்கி 5 பவுன் தாலிக்கொடியை பறித்துச் சென்ற வழக்கில் இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே எரப்பம்பாளையத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மனைவி இந்திரா(62) மளிகை கடை நடத்தி வருகின்றார். கடந்த 21-ம் தேதி மாலை மளிகை கடையில் தனியாக இருந்த இந்திராவிடம் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் சிகரெட் கேட்டுள்ளார்.

சிகரெட் எடுக்க மூதாட்டி கடையின் உள்ளே சென்றபோது கல்லை எடுத்து மூதாட்டியின் பின் தலையில் தாக்கியுள்ளார். இதில் மூதாட்டி மயக்கமடைந்த நிலையில், அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலிக்கொடியை பறித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, படுகாயம் அடைந்த இந்திராவை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அரச்சலூர் காவல்துறையினர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நவநீதன் மற்றும் ஈரோடு ஆர்.என்.புதூரைச் சேர்ந்த கலைச்செல்வன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.