Accused
Accused pt desk
குற்றம்

மதுரை சித்திரை திருவிழா: பக்தர்களிடம் கொள்ளையடிக்க திட்டம் - வடமாநில கும்பல் கைது

webteam

செய்தியாளர்: செ.சுபாஷ்

மதுரை திருப்பரங்குன்றம் கட்ராபாளையத்தில் உள்ள தனியார் விடுதியில், சுற்றுலா வந்ததாகக்கூறி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பல் கடந்த 20ஆம் தேதி அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த அறையிலிருந்து தண்ணீர் கேட்டுள்ளனர். அப்போது ரூம்பாய் வெளியே சென்றிருந்ததால் விடுதியின் மேனேஜர் அரசகுமார் என்பவர் தண்ணீர் எடுத்துச் சென்றுள்ளார்.

Accused

அப்போது அந்த அறையில் இருந்தவர்கள் கூட்டமாக அமர்ந்து, சித்திரை திருவிழா திருக்கல்யாணம் முடிந்து வரும் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததாக இந்தியில் பேசிக்கொண்டிருந்துள்ளனர். ஒன்றும் தெரியாததுபோல் அறையில் இருந்து வெளியே வந்த அரசகுமார், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நவ்சத், ஹின்னா கான், சப்னா ஷா, ஜெய்தா ஷா, அன்வர் ஷா, ஷமிம் ஷா, ராஜக் ஷா, ருக் ஷனா ஆகிய ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேரை கைது செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.