9 கிலோ கஞ்சா பறிமுதல்  pt desk
குற்றம்

கோவை: ரயில் நிலைய நடைமேடையில் கேட்பாரற்றுக் கிடந்த பை - 9 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் இரு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஐஸ்வர்யா

கோவை குற்றத் தடுப்பு மற்றும் கண்டறியும் பிரிவு காவலர்கள் மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோர்பா - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று சென்ற பிறகு அந்த நடைமேடையில் இருந்த ஒரு பை கைப்பற்றப்பட்டது. அந்தப் பையை போலீசார் சோதனை செய்த போது அதில், கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. தெரியவந்தது.

இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக, ரயில் நிலையத்தில் அசாம் மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.

அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலில் கடந்த வாரம் 8 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர் கஞ்சா கடத்தல் சம்பவங்களால் கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.