செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை வேளச்சேரி திரௌபதி அம்மன் கோயில் தெருவில் சாலையில் நடந்து சென்ற 26 வயதுடைய இளம்பெண் ஒருவரை நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார். இது குறித்து இளம்பெண் தனது சகோதரிடம் கூறியுள்ளார். பின்னர் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,
புகாரின் பேரில் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில், அவர் மதுரை மேலூரைச் சேர்ந்த வினோத் (35), ஓட்டுநராக வேலை பார்த்து வருவதும், திருமணமாகி விடுமுறைக்கு கடந்த ஒரு மாதமாக மனைவி ஊருக்குச் சென்றதும் தெரியவந்தது.
மதுபோதையில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார். விசாரணைக்குப் பிறகு அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.