செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்தில், பெண்கள் ரயில் பெட்டி நிற்கும் பகுதியில் நின்று ஆபாச செயலில் ஈடுபட்ட நபர் குறித்த வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசாரும், ஓட்டேரி போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து ஆபாச செயலில் ஈடுபட்ட நபரை ஓட்டேரி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி (32) என்பதும், இவர், காலை மற்றும் மாலை நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வந்து பெண்கள் ரயில் பெட்டி நிற்கும் இடத்திற்கு அருகே நிர்வாணமாக நின்று ஆபாச செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர், கோயம்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று மதியம் ரயில் நிலையத்திற்கு வந்த அவர், மீண்டும் ஆபாச செயலில் ஈடுபட முயன்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த ஓட்டேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.