செய்தியாளர்: கிறிஸ்துராஜன்
சென்னை திருவொற்றியூர் டிஎஸ்ஆர் நகர் ஒத்தைவாடை தெருவைச் சேர்ந்தவர் ரகு (35). டைல்ஸ் ஒட்டும் கூலித் தொழிலாளியான இவருக்கு ரேவதி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் அடிக்கடி ரேவதிக்கும் ரகுவிற்கும் இடையே குடும்பச் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ரகு, அடிக்கடி ரேவதியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று இரவு இரண்டு பிள்ளைகளையும் அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்த நிலையில், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரகு, கத்தியால் ரேவதியின் வயிற்றில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் ரகு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.