செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை தி.நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் பிரபல நகைக்கடையில் (தங்கமயில்) கடந்த 9ம் தேதி தங்க நகைகளை சரிபார்த்துள்ளனா. அப்போது மூன்று சவரன் தங்க கை செயில் டேக் இல்லாததால் சந்தேகத்தின் பெயரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அப்போது அதே நகைக் கடையில் பணியாற்றி வந்த ஆனந்தன் என்பவர் கடந்த 6ம் தேதி நகையை திருடி விட்டு போலி நகையை வைத்தது தெரியவந்தது. இதையடுத்து கடையின் மேனேஜர் குருபாலன், பாண்டி பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நகையை திருடிய கடை ஊழியர் ஆனந்தன் (36) என்பவரை கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆனந்தனிடம் பாண்டி பஜார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.