செயின் பறிப்பு pt desk
குற்றம்

சென்னை | 1 மணி நேரத்தில் 8 இடங்களில் செயின் பறிப்பு – விமானத்தில் தப்ப முயன்ற இருவர் கைது

சிங்கம் பட பாணியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்களை விமானத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை அடையார் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர், சாஸ்திரி நகர், உள்ளிட்ட 8க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 6 முதல் 7 மணிக்குள் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Arrested

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது தனிப்படை காவல்துறையினர் சிங்கம் பட சினிமா பாணியில் விமானத்திற்குள் சென்று இருவரை கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில், செயின் பறிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.