ஆட்டோ ஓட்டுநர் கைதுpt desk
குற்றம்
சென்னை | இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநர் கைது
சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: ஜெ.அன்பரசன்
சென்னை, ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ரெஸ்டாரென்டில் வேலை செய்து வரும் இளம்பெண் ஒருவர், நேற்று மதியம் தனது தோழிகளுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.
Arrestedpt desk
இது குறித்து, தனியார் ரெஸ்டாரென்டின் உரிமையாளர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுதது அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ ஓட்டுநர் ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (21) என்ற இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.