Arrested pt desk
குற்றம்

சென்னை | IPL ரசிகர்களின் செல்போன்கள் திருட்டு - வடமாநில கும்பலின் கூட்டாளிகள் கைது!

ஐபிஎல் ரசிகர்களின் செல்போன்களை திருடும் வடமாநில கும்பலின் கூட்டாளிகள் சிக்கினர். வேலூரில் சிக்கிய 3 நபர்களை சென்னை கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

சென்னையில் நடந்த சிஎஸ்கே – ஆர்சிபி அணிக்களுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்களின் செல்போன்களை நூதன முறையில் திருடிய கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஆகாஷ் நோநியா, விஷால் குமார் மாட்டோ, கோபிந்த் குமார் என்பதும், இவர்களுடன் 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதையடுத்து அவர்களிடமிருந்து 38 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

CSK RCB

இந்த நிலையில், இந்தக் கும்பலின் கூட்டாளிகள் வேலூரில் பதுங்கி இருப்பதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வேலூர் போலீசாரை உஷார் படுத்தி கைது செய்துள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல்குமார், ஜிதேந்திர சஹனி, பர்வீன் குமார் மஹதோ ஆகிய 3 நபர்களை வேலூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர்கள் வேலூர் வந்து 3 நபர்களையும் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.