செய்தியாளர்: ஆனந்தன்
சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவல் அடுத்து தனிப்படை போலீசார், நுங்கம்பாக்கம் கெத்துறல் கார்டன் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் வேலை செய்யும் ராமச்சந்தர் என்பவரிடம விசாரணை செய்தனர்.
இதில், பெங்களூரில் இருந்து கிரைண்டர் செயலி மூலம் போதைப் பொருட்களை வாங்கி அவரது நண்பர்கள் கார்த்திக் ராஜா மற்றும் முகமது ஜெக்பர் சாதிக் ஆகியோரிடம் கொடுத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார், மூவரையும் கைது செய்து, எட்டு கிராம் மெத்தபெட்டமைன், மூன்று செல்போன்கள், 24 சிரஞ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.