நடிகர் கிருஷ்ணா கைது pt desk
குற்றம்

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு - நடிகர் கிருஷ்ணா கைது

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா, 24 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: ஆனந்தன்

நடிகா ஸ்ரீகாந்த்-ஐ தொடர்ந்து நடிகர் கிருஷ்ணா கைது

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மதுபான பாரில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.. இது குறித்து மதுபான பார் மேலாளர், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.. அப்போது ஓட்டல் உரிமையாளர் தூண்டில் ராஜாவுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர் அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று தகராறில் ஈடுபட்டனர்.. பின்னர் போலீஸார் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து பிரசாத், அஜய் வாண்டையார் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருள் பறிமுதல்

பண மோசடியில் ஈடுபட்டதால் குண்டர் சட்டத்தில் கைது:

இதையடுத்து அவர்களிடம் போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத், நடிகர் அஜய் வாண்டையார் ஆகியோர் பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், குறைந்த விலையில் கார் மற்றும் நிலங்களை வாங்கித் தருவதாகக் கூறியும், பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.. இதனை அடுத்து போலீஸார், அவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்:

இந்நிலையில் போலீஸார் பிரசாத் வங்கி பணவர்த்தணை மற்றும் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது.. அதன் பேரில் சேலத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவரை கைது செய்து கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.. மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் போதைப் பொருள் கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவரை கைது செய்தனர்..

24 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த விசாரணை:

பின்னர் போலீஸார் பிரதீப் குமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் கடந்த 3 வருடங்களாக பிரதீபிடம் இருந்து கொக்கைன் போதைப்பொருளை வாங்கி நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.. பின்னர் போலீஸார் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நடிகர் கிருஷ்ணா உள்ளிட சிலர் தன்னுடன் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்..

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது:

அதன்பேரில் போலீஸார் நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். . அதன்பேரில் நேற்று மதியம் நடிகர் கிருஷ்ணா தனது வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார். இதையடுத்து அவரிடம் 24 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய போலீசார், அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடிகர் ஸ்ரீகாந்த் உடன் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்தும், போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் உள்ள தொடர்பு குறித்துட' விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..