9 ஆண்டுகள் தலைமறைவு - பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது pt desk
குற்றம்

கள்ளக்குறிச்சி | 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி கைது!

கள்ளக்குறிச்சி அருகே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PT WEB

செய்தியாளர்: பாலாஜி

கள்ளக்குறிச்சி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்னசேலம் அருகே உள்ள கீழ் குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் கடந்த 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர், கடந்த 9 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சங்கராபுரம் நீதிமன்ற வளாகம்

இதனால் அவர் மீது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பிரகாஷ் கேரள மாநிலத்தில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. தகவலின் பேரில் பிரகாஷ் செல்போன் நம்பரை ட்ராக் செய்தபோது கேரளாவில் இருந்து தனது சொந்த கிராமமான கீழ் குப்பத்திற்கு செல்ல கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் அவர் இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து சங்கராபுரம் போலீசார், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.