செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான காவல்துறையினர் ஆண்டிபட்டி - தேனி சாலையில் உள்ள ஸ்ரீ ரங்கநாதபுரம் விளக்கு பகுதியில் வாகன சோதையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காவல்துறையினரை பார்த்ததும் தப்பிவோட முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார், சோதனை செய்தனர்.
அதில், 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த குருவி ரொட்டி என்பதும், மற்றொருவர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அய்யனார் புரத்தைச் சேர்ந்த அழகு என்பதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து விற்பனை செய்ய கொண்டு சென்றதும் தெரியவந்தது அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்