ஆந்திர இளைஞர் போக்சோவில் கைதுpt desk
குற்றம்
திருப்பத்தூர் | ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – ஆந்திர இளைஞர் போக்சோவில் கைது
ஓடும் ரயிலில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்தியாளர்: சுரேஷ்
சேலத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் கடப்பாவில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ரயில் காட்பாடி தாண்டி ஜோலார்பேட்டையை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது உறங்கிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதையடுத்து சிறுமி தகவலின்பேரில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆந்திர மாநிலம் பலமனேரி பகுதியைச் சேர்ந்த குமார் என்ற இளைஞரை கைது செய்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.