செய்தியாளர்: சுதீஸ்
போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று சிலர் சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய காவல்துறையினர் நீலாம்பூர் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சாவை விற்பனை செய்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகரன் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.