கொரோனா வைரஸ்

பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து 6 அடி தூரத்தில் காற்றில் கொரோனா வைரஸ் பரவும்..!?

Veeramani

பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து 6 அடி தூரத்தில் காற்றில் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் விளக்கம் அளித்திருக்கிறது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து ஆறு அடி தூரத்திற்குள் காற்றில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது என்றும்,  போதிய காற்றோட்டம் மற்றும் காற்று வெளியேறும் வழிகளற்ற மூடப்பட்ட இடங்களில் இந்த அபாயம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர் உடல் உழைப்பில் ஈடுபட்டிருந்தால் அல்லது குரல் எழுப்பினால் சுவாச மற்றும் வியர்வை திரவங்கள் வழியாகவும் தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நீண்ட நேரம் இருப்பது (15 நிமிடங்களுக்கு மேல்) ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.