கொரோனா வைரஸ்

ராஜஸ்தான்: கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் வீட்டு சாப்பாடு சாப்பிடலாம்..!

Veeramani

(கோப்பு புகைப்படம்)

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை குடும்ப உறுப்பினர்கள் சந்திக்கவும், வீட்டிலிருந்து உணவு எடுத்து வந்து கொடுக்கவும் ராஜஸ்தான் அரசு அனுமதியளித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிபிஇ கிட் அணிந்துவந்து சந்திக்க ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதுபோல பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும்போது பிற கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் சமைத்த உணவினை எடுத்துவந்து கொடுக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் அகில் அரோரா பிறப்பித்த உத்தரவில், "கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தனிமை மற்றும் அதன் காரணமாக ஏற்படும் மன அழுத்தம் போன்ற சிக்கல்களை தீர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.