கொரோனா வைரஸ்

கொரோனா 3ஆவது அலை குறைகிறது: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்

JustinDurai

மூன்றாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவது தெரிய வந்திருப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்றின் மூன்றாம் அலை வேகம் எடுத்தது. இதனால், நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், மூன்றாம் அலையின் தாக்கம் குறித்து சென்னை ஐஐடி சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த 7 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மூன்றாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவது தெரியவந்திருப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ஜனவரி 13 ஆம் தேதி நிலவரப்படி, சென்னை உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் தொற்று பரவல் குறைந்து வருவதாக சென்னை ஐஐடி தகவல் வெளியிட்டுள்ளது. நோய் பரவும் வேகம், ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.