கொரோனாவுக்கான இணைநோய்கள் பட்டியலில் புதிதாக காசநோயையும் இணைத்துள்ளது மத்திய சுகாதாரத்துறை. மேலும் காசநோய் இருப்பவர்களுக்கு, தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும், கொரோனா உறுதியானவர்களுக்கு தொடர்ந்து 2 அல்லது 3 வாரங்களுக்கு இருமல் தெரியவந்தால் அவர்கள் காசநோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஹெச்.ஆர்.சி.டி பரிசோதனையை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசநோய் மட்டுமன்றி, இன்னும் 6 காரணங்கள் ‘கொரோனாவை தீவிரப்படுத்தும் வாய்ப்புள்ள நோய்கள்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது. அக்காரணங்கள்: 60 வயதுக்கு மேற்பட்டு இருப்பது, இதய பாதிப்பு - உயர் ரத்த அழுத்தம் - இதய நோய் - சர்க்கரை நோய் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது, காசநோய் இருப்பது, நுரையீரல் - சிறுநீரக பாதிப்பு இருப்பது, பெருமூளை தொடர்பான சிக்கல் இருப்பது, உடல் பருமன் இருப்பது ஆகியவையாகும்.
கடந்த இரு அலை கொரோனாவின்போதும், மத்திய அரசு இதுதொடர்பாக தனி அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காசநோய்க்கும் கொரோனாவுக்கும் ஒரேமாதிரியான அறிகுறிகள்தான் (இருமல், மூச்சுத்திணறல், காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு) இருக்கும் என்பதால் பலரும் இரண்டையும் குழப்பிக்கொள்வதுண்டு என்கின்றனர் மருத்துவர்கள். இவ்விரண்டில், கொரோனா பாதிப்பு சில வாரங்களில் சரியாகிவிடும். ஆனால் காசநோய், நீடித்து இருக்கக்கூடியது மற்றும் தீவிர வாழ்நாள் பாதிப்பை ஏற்படத்த வல்லது. இதனாலேயே மருத்துவர்கள் பலரும் ‘2 - 3 வாரங்களுக்கும் மேல் இருமல் தொடர்ந்து தெரியவந்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. மருத்துவமனை சென்று காசநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துவருகின்றனர்.
‘2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்போம்' என அரசு தீர்மானம் எடுத்திருக்கும் இந்த நேரத்தில், அதை கொரோனா கடினமாக்கி வருகிறது.
தொடர்புடைய செய்தி: 3,000அடி உயரத்தில் மோதிக்கொள்ளவிருந்த இருவிமானங்கள்; தப்பியது எப்படி? - பரபரப்பு தகவல்கள்
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!