Anbarvi, Kamalhaasan, Syam Pushkaran x page
சினிமா

கமல்ஹாசன் படத்தில் இணைந்த எழுத்தாளர் யார் தெரியுமா? | KH 237 | Syam Pushkaran

ஆஷிக் அபுவின் `22 Female Kottayam', `Idukki Gold', `Mayanadhi', `Rifle Club' போன்ற சிறப்பான படங்களில் எழுத்தாளராக பங்களித்திருக்கிறார்.

Johnson

கமல்ஹாசன் நடிப்பில் அன்பறிவ் இயக்கும் படம் 'KH 237'. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இப்படம் அறிவிக்கப்பட்டது. `தக் லைஃப்' படத்திற்கு அடுத்து இப்படத்தில்தான் கமல்ஹாசன் நடிக்க உள்ளார். இந்நிலையில் நேற்று இப்படத்தில் பிரபல கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் இணைந்துள்ளதாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்.

கமல்ஹாசனை பொறுத்தவரை, ஒரு துறையில் சிறந்த ஆளுமைகள் இருந்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவார். அப்படி, இப்போது கமல் படத்தில் இணைத்திருப்பவர்தான் ஷ்யாம் புஷ்கரன்.

யார் இந்த ஷ்யாம்?

மலையாள சினிமாவில் மிகப் பிரபலமான ஸ்க்ரீன் ரைட்டர்தான் ஷ்யாம் புஷ்கரன். ஆஷிக் அபு இயக்கத்தில் உருவான `Salt N' Pepper' படத்தின் கதையை திலீஷ் நாயருடன் இணைந்து எழுதி சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தைத்தான், தமிழில் `உன் சமையல் அறையில்' என பிரகாஷ் ராஜ் ரீமேக் செய்தார். தொடர்ந்து ஆஷிக் அபுவின் `22 Female Kottayam', `Idukki Gold', `Mayanadhi', `Rifle Club' போன்ற சிறப்பான படங்களில் எழுத்தாளராகப் பங்களித்திருக்கிறார். 

Syam Pushkaran

இவை மட்டுமில்லாது `Maheshinte Prathikaaram', `Thondimuthalum Driksakshiyum', `Kumbalangi Nights' போன்ற மிகவும் கொண்டாடப்பட்ட மலையாளப் படங்களில் எழுத்தாளராக பணியாற்றியவர் ஷ்யாம். இவரை கமல் தன் படத்தில் இணைத்திருக்கிறார் என்றால், புதுமையான கதை ஒன்று உருவாகிறது என நாம் புரிந்துகொள்ளலாம்.

சண்டைப் பயிற்சியாளர்களாக இருந்த அன்பறிவ், தங்களின் இயக்குநர் அறிமுகத்தை 'KH 237' மூலம் நிகழ்த்த இருக்கிறார்கள். இந்தப் படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.