கயாது லோஹர் pt web
சினிமா

மலையாள நடிகையா.. கன்னட தேவதையா? யார் இந்த கயாது லோஹர்? சுவாரஸ்ய பின்னணி!

கதை சிறப்பாக உள்ளதால் டிராகன் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.. ஆனால், கதையை கடந்து காந்தப் புன்னகைக்காக சமூக வலைதளங்களில் பெரும் கொண்டாட்டத்தைப் பெற்றிருக்கிறார், நடிகை கயாது... யார் இவர்? பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் புனிதா பாலாஜி

இன்ஸ்டாகிராமை திறந்தாலே நோடிஃபிகேஷனுக்கு முன்னால் காணக் கிடைப்பது நடிகை கயாது லோஹரின் வீடியோக்கள் தான்... கயாதுவின் காட்சிகள் ரீல்ஸ்களாக ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கின்றன. ஆம்... டிராகன் படத்தில் இவரின் கதாபாத்திரத்திற்குக் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இணையத்திலும் டிரெண்டாகி வருகிறார். இவரது பல்லவி கதாபாத்திரத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து அறிந்த கயாது, அழகுத் தமிழை முறையாகப் பயின்று ஆடியன்ஸுக்கு அழகாக நன்றி கூறியிருக்கிறார்...

இந்த வீடியோதான் இணையதளங்களின் லேட்டஸ்ட் ட்ரெண்ட்... யார் இந்த கயாது? இவர் இதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தார் என தேடியபோது சில தகவல்கள் கிடைத்தன. இவர், டிராகனுக்கு முன்பே தமிழில் சில படங்களில் நடிக்க தேர்வாகியிருக்கிறார். இதை, அப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கினே கூறினார்...

மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் தேர்வானாலும், சில காரணங்களால் அவற்றில் நடிக்க முடியாமல் போயிருக்கிறது. அது ஒருபுறமிருக்க, மயக்கும் புன்னகையை வைத்து இவர் மலையாள நடிகையா?, கண்ணழகை வைத்து இவர் கன்னட தேவதையா?, என இணையத்தில் பலர் கவிதை பாடி வருகின்றனர்...

ஆனால், அசாமில் உள்ள TEZPUR பகுதிதான் கயாதுவின் பிறப்பிடம்.. 2000ஆம் ஆண்டு ஏப்ரலில் பிறந்த இவர், பி.காம் பட்டப்படிப்பை முடித்துள்ளார். மாடலிங் துறையின் மீது விருப்பம் ஏற்பட்டதால் மாடல் அழகியான தனது பயணத்தைத் தொடங்கிய கயாதுவுக்கு, பல விருதுகளும் கிடைத்துள்ளன.

அதன்பின் திரைத்துறை நோக்கி நகர்ந்த அவருக்கு, முதல் வாய்ப்பளித்தது கன்னட சினிமா தான். 2021-ல் வெளியான MUGILPETE படத்தில் அபூர்வா எனும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார், காயாது.. அதன்பின் மலையாளம், கன்னடம் என 4 படங்களில் நடித்த அவருக்கு, டிராகனில் கிடைத்த பல்லவி கதாபாத்திரம் கவனம் பெற்றுத் தந்துள்ளது.

தற்போது ஆகாஷ் பாஸ்கரனின் இயக்கத்தில் அதர்வாவோடு இதயம் முரளி படத்தில் நடித்து வருகிறார், கயாது... மனதுக்கு பிடித்துவிட்டால் நடிகைக்கு கோயில் கூட கட்டத் தயங்காத தமிழ் சினிமா ரசிகர்கள், அழகையும் திறமையையும் என்றுமே பாராட்டத் தயங்கமாட்டார்கள்..