வாட்டர் மெலன் திவாகர் web
சினிமா

அறையில் அடைத்து தாக்கப்பட்டாரா திவாகர்..? உண்மையில் நடந்தது என்ன? Youtube சேனல் வெளியிட்ட ஆதாரம்!

தனியார் Youtube சேனலை சேர்ந்தவர்கள் தன்னை தாக்கியதாக சமூக வலைதள பிரபலம் திவாகர் புகார் கூறிய நிலையில், உண்மையில் அங்கு நடந்தது என்ன என்பது குறித்து அந்த Youtube சேனல் வீடியோ வெளியிட்டுள்ளது.

PT WEB

கஜினி படத்தின் வாட்டர்மெலன் சீன் மூலம் பிரபலமான திவாகர், பிக் பாஸ், சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். செம்பரம்பாக்கம் படப்பிடிப்பில் கானா வினோத், மகாபா ஆனந்த், புகழ், அசார் ஆகியோர் இரும்புக் கம்பியால் தாக்கியதாக புகார் அளித்தார். பின்னர் யூடியூப் சேனல் பேட்டியில் தன்னை அறையில் அடைத்து தாக்கியதாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டதால் சர்ச்சை வெடித்தது.

கஜினி படத்தில் சூர்யாவின் வாட்டர்மெலன் சீனை நடித்து அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமானவர் திவாகர். இதன் மூலம் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு தனியார் நிறுவனம் நடத்திய சமையல் நிகழ்ச்சிலும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இதற்காக சில நாட்களுக்கு முன்னர், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள படப்பிடிப்பிற்காக சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பு நடந்தபோது, அங்கு தன்னுடன் படப்பிடிப்பு தளத்தில் இருந்த கானா வினோத், மாகாபா ஆனந்த், புகழ், அசார் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தாகவும், அப்போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தன்னை இரும்பு கம்பியால் அவர்கள் தாக்கியதாகவும் திவாகர் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.

இதனிடையே மகாபா,புகழ், கானா வினோத், அசார் ஆகிய 4 பேரும் வழக்கறிஞர்களுடன் காவல் நிலையத்தில் ஆஜராகினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், படப்பிடிப்பு தளத்தில் சில தவறான விஷயங்களை அவர் செய்ததால் சேனல் நிர்வாகமே திவாகரை வெளியே அனுப்பியதாகவும், நிகழ்ச்சியில் நடிகைகளிடம் முகம் சுளிக்கும் அளவுக்கு திவாகர் பேசியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் கணவர் முன்பே அவரின் மனைவியின் தோளில் திவாகர் கைபோட்டு இருந்ததை ஒரு கணவர் எப்படி ஏற்றுக்கொள்வார் என்றும் கேள்வி எழுப்பினர்.

இந்த சூழலில் தனியார் யூடியூப் சேனல் திவாகரிடம் Interview எடுக்க அழைப்பு விடுத்திருந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தபோது, திவாகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் தன்னை ஒரு அறையில் அடைத்து, ஒன்று சேர்ந்து தாக்கியதாக கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குறிப்பிட்ட யூடியூப் சேனல் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் திவாகரிடம் அந்த சேனலை சேர்ந்தவர் பேட்டி எடுக்கும்போது, திவாகருக்கு எதிரான சில கேள்விகளை கேட்டு, அதற்கான ஆதாரத்தை கொடுக்க முன்வந்துள்ளார்.

அப்போது திவாகர் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் விலகியதோடு, அந்த செய்தி சேனலின் கேமராவை உடைக்கும் செயலில் ஈடுபட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. யூடியூப் சேனல் தன்னை தாக்கியதாக திவாகர் புகார் அளித்ததும், அதற்கு யூடியூப் நிறுவனம் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து வீடியோ வெளியிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.