vijay, trisha x page
சினிமா

ஒரே கலர் DRESS.. திருமண விழாவுக்கு இணைந்துவந்த விஜய் - த்ரிஷா.. #ViralVideo

திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ்.சுரேஷின் மகன் திருமணம் இன்று சென்னையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இதன் வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, வரயிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிட உள்ளார். இதற்காக, அவர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில், விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ’நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது தனக்கு 2021 ஏப்ரல் முதல் தெரியவந்ததாகவும், இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம். விஜய் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று, குறிப்பிட்ட நடிகையுடன் பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டார். நடிகை இந்த வெளியூர் பயணங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தது எனக்கும் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய், சங்கீதா

இந்த வழக்கு, ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது, தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தவெக தலைவர் விஜய், நடிகையுடன் உள்ள தொடர்பு பற்றி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பொதுவெளியில் விமர்சித்திருந்தார். அதாவது, இந்த விவாகரத்திற்கு நடிகை த்ரிஷாவுடனான தொடர்புதான் காரணம் என சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. எனினும், இதுகுறித்து விஜய் அல்லது த்ரிஷா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

அதேநேரத்தில், நயினார் நாகேந்திரனின் விமர்சனத்திற்கு, நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்திருந்தார். தவிர, த்ரிஷாவுக்கு ஆதரவாகக் குரல்களும் வலுக்கத் தொடங்கின. மேலும், தனிப்பட்ட உரிமை மீது விமர்சனம் செய்யக்கூடாது எனப் பலரும் ஆலோசனை வழங்கினர். அதேநேரத்தில், விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இது சமூக வலைதளங்களில் மேலும் பட்டாசாய் வெடிக்க ஆரம்பித்தது. இதுதொடர்பாக, பலரும் பல்வேறு கருத்துகளை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், AGS குழுமத்தின் உரிமையாளர்களில் ஒருவரான கல்பாத்தி எஸ்.சுரேஷின் மகன் திருமணம் இன்று சென்னையில் மிக விமரிசையாக நடைபெற்றது. இதன் வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒன்றாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்து வந்ததும் கவனம் ஈர்த்தது. இருவரும் ஒன்றாக விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.