ஜனநாயகன் pt web
சினிமா

தளபதி 69: ‘ஜனநாயகன்’ விஜய்.. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

அரசியலில் களமிறங்கியதால் தனது கடைசி படமாக விஜய் அறிவித்துள்ள அவரது 69 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

PT WEB

ஹெச் வினோத் இயக்கும் இத்திரைப்படத்தில் அனிமல் பட வில்லனான பாபி தியோல், பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே, பிரேமலு பட நடிகை மமிதா பைஜு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷ்ன் தயாரிக்கிறது.

தளபதி 69 ஒரு கமர்சியல் படமாகவும், அதேநேரத்தில் அரசியல் பேசும் திரைப்படமாகவும் இருக்கும் என்று இயக்குநர் ஹெச்.வினோத் கூறியிருந்த நிலையில், படம் கிட்டத்தட்ட 70% முடிந்துவிட்டதாக கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. படத்திற்கு ‘ஜனநாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் தனது ரசிகர்களுடன் எடுக்கும் signature நெய்வேலி selfieயை போன்ற புகைப்படத்தினை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக படக்குழு வெளியிட்டுள்ளது.