த்ரிஷா  முகநூல்
சினிமா

”இது கோழைத்தனம்!” - இணையத்தில் விஷமமான கருத்துகளை பதிவிடும் நபர்களுக்கு த்ரிஷா கண்டனம்!

இது கோழைத்தனம் எனக் குறிப்பிட்டுள்ள த்ரிஷா, இறுதியாக GOD BLESS YOU என பதிவிட்டுள்ளார்.

PT WEB

இணையத்தில் விஷமமான கருத்துகளை பதிவிடும் நபர்களை நடிகை த்ரிஷா கடுமையாக சாடியுள்ளார்.

இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிறர் குறித்து முட்டாள்தனமான கருத்துகளை பதிவிடுபவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் நன்றாக தூங்குகிறார்களா?, பிறரைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவதுதான் அவர்களின் வேலையா? என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது கோழைத்தனம் எனக் குறிப்பிட்டுள்ள த்ரிஷா, இறுதியாக GOD BLESS YOU என பதிவிட்டுள்ளார்.

இது அஜித்துடன் நடித்த குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா சரியாக பயன்படுத்தப்படாதது குறித்த விமர்சனத்துக்கு பதிலடியா அல்லது வேறு பிரச்சினைக்கான எதிர்வினையா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி நிற்கிறார்கள்.