ஜனநாயகன் ரிலீஸாகாத நிலையில் கோவில்பட்டியில் வெறிச்சோடிய திரையரங்குகள் web
சினிமா

கோவில்பட்டி | ஜனநாயகன் ரிலீஸ் இல்லை.. வெறிச்சோடிய திரையரங்குகள்!

கோவில்பட்டியில் உள்ள திரையரங்குகளில் ஜனநாயகன் படம் ரிலீஸாகாததால் மக்கள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது..

PT WEB

பொங்கல் பண்டிகைக்கு எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால் வெளியாகவில்லை. இதனால் கோவில்பட்டி திரையரங்குகளில் பராசக்தி திரைப்படம் வெளியானாலும், மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. ரசிகர்கள் ஜனநாயகன் வெளியாவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்ததாக கூறினர்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி ‌ இரண்டு திரைப்படங்களும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக ஜனநாயகன் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சத்தியபாமா சினிமாஸ், லட்சுமி, சண்முகா உள்ளிட்ட மூன்று திரையரங்குகளில் பராசக்தி இன்று வெளியானாலும் எதிர்பார்த்த அளவு கூட்டங்கள் இல்லை. வழக்கமாக பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதேபோன்று ரசிகர்களின் கொண்டாட்டங்களும் இருப்பது வழக்கம்.

ஆனால் இன்றைக்கு கோவில்பட்டி திரையரங்குகளில் எவ்வித ஆரவாரம் இல்லாமல் காணப்பட்டது. சத்தியபாமா சினிமாஸில் மட்டும் பராசக்தி திரைப்படத்திற்கு பரவலாக மக்கள் திரைப்படம் பார்க்க வந்தனர். மற்ற இரண்டு திரையரங்குகளில் வழக்கத்தை விட மக்கள் குறைவாக வந்தது மட்டுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து ரசிகர்கள் கூறும்போது, பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததாகவும், ஆனால் அது வெளிவரவில்லை என்பது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், பராசக்திக்கும் கடைசி நேரத்தில் தான் தணிக்கை சான்றிதழ் வந்ததால் கூட்டம் குறைவாக இருப்பதாக கூறினர்.

மேலும் இந்த பொங்கல் பண்டிகை திரையரங்குகளில் கொண்டாட்டம் இல்லாத கொங்கலாக இருப்பதாகவும், ஜனநாயகன் திரைப்படம் வெளியானால்தான் பொங்கல் பண்டிகை ஆரவாரமாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

வழக்கமாக பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும், கூட்டமும் அதிகமாக இருக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் வெளியாகாத காரணத்தினால் , இன்றைக்கு பராசக்தி திரைப்படம் வெளியானாலும், மக்கள் கூட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.