சினிமா

பிசாசு-2 திரைப்படத்தின் பாடல் அக்.1 இல் வெளியீடு

பிசாசு-2 திரைப்படத்தின் பாடல் அக்.1 இல் வெளியீடு

JustinDurai
பிசாசு-2 படத்தில் இடம்பெற்றுள்ள உறவின் பாட்டு என்ற பாடல் வரும் 1-ம் தேதி வெளியாகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்திருக்கும் திரைப்படம் பிசாசு-2. திகில் வகையில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு புதிய திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். அதில் அவர் இசையில் உருவாகியுள்ள 'உறவின் பாட்டு' என்ற பாடல் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 'உறவின் பாட்டு' பாடலை சிங்கிள் ட்ராக் முறையில் வெளியிடுகின்றனர்.