Hi Nayantara, Kavin
கோலிவுட் செய்திகள்

நயன்தாரா - கவினின் `ஹாய்' படத்தின் நிலைமை என்ன? | Hi | Nayantara | Kavin

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, வளர்ந்துவரும் இளம் நடிகர் கவின், இந்த இருவரும் இணைந்து நடிக்கும் படம் `ஹாய்' (Hi). இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

Johnson

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா, வளர்ந்துவரும் இளம் நடிகர் கவின், இந்த இருவரும் இணைந்து நடிக்கும் படம் `ஹாய்' (Hi). இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. விஷ்ணு எடவன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் நயன்தாரா, கவினுடன் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற்றுள்ளது. அதில் இரண்டு பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் இயக்குநர் விஷ்ணு எடவன், கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் லோகேஷ் கனகராஜிடம் அஸோஸியேட் டைரக்டராக பணியாற்றியவர். மேலும் பொளக்கட்டும் பற பற, போர்கண்ட சிங்கம், மோனிகா உள்ளிட்ட பாடல்களை எழுதி பாடலாசிரியராகவும் கவனம் பெற்றார்.

hi movie poster

இப்படத்தின் கதை பற்றி விஷ்ணு கூறுகையில் "ஹாய்' முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்பக் கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது" என்கிறார். Z ஸ்டூடியோஸ் (Z Studios), தி ரவுடி பிக்சர்ஸ் (The Rowdy Pictures) மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) மூன்று நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.