R J Balaji Karuppu
கோலிவுட் செய்திகள்

"எங்களுக்கு நல்ல CM கிடைத்துவிட்டார்.." - ஆர் ஜே பாலாஜி

எங்கள் ஊரில் நிறைய கட்சிகளில் இருந்து, நிறைய பேர் CM ஆக முயற்சித்தார்கள். உங்கள் ஊரில் ஒரே கட்சியில் இருந்து நிறைய பேர் CM ஆக முயற்சிக்கிறார்கள்.

Johnson

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய ‘கருப்பு’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழா திருவனந்தபுரத்தில் நடந்தது. மலையாள மொழி, கலைஞர்கள் மீது உள்ள பற்று குறித்து பாலாஜி பேசினார். இந்திரன்ஸ் இந்த படத்தின் ஆன்மா என புகழ்ந்து, உடல்நிலை சரியில்லாவிட்டும் அவர் காட்டிய அர்ப்பணிப்பை பாராட்டினார். அனகா, ஸ்வாசிகா, ஷிவதா, உன்னிமாயா, அஜூ வர்கீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றதை நினைவுகூர்ந்தார்.

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் Pre-Release நிகழ்வு நேற்று கேரளாவில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஆர் ஜே பாலாஜி "எனக்கு மலையாளம் மிகவும் பிடிக்கும், மலையாள கலைஞர்கள் பிடிக்கும். கல்லூரியில் படித்த போது நிறைய மலையாளி நண்பர்கள், என் படத்திலும் நிறைய மலையாள நடிகர்கள் இருப்பார்கள். திருவனந்தபுரத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி. சூர்யா சாரின் ரசிகர்கள் இவ்வளவு பேர் வந்து சென்னையிலோ, கோவையிலோ, மதுரையிலோ இருப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறீர்கள்.

Karuppu

எனக்கு ஒரே ஒரு முறையாவது கேரளாவுக்கு வரவேண்டும் என தோன்றியது. கருப்பு படத்திற்கும் கேரளாவிற்கும் நிறைய தொடர்புகள் உண்டு. நிறைய புகழ்பெற்ற நடிகர் இந்திரன்ஸ் சார் இந்தப் படத்திற்கு வந்தது ஒரு பரிசு. இந்தப் படத்தில் சூர்யா சார் நடிக்கிறார் என முடிவான பின்னர், இந்தப் படத்தில் ஒரு நடிகர் மட்டும் உறுதியாக தேவை என முடிவு செய்தேன். அவர் தான் இந்திரன்ஸ் சார். அவருக்காக நிறைய காத்திருந்தோம். அவர் போன்ற ஒரு நடிகர் இந்தப் படத்தில் இருப்பது பெரிய பாக்கியம். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட காலையில் இருந்து நடுராத்திரி வரை நடித்து கொடுப்பார், எத்தனை டேக் வேண்டுமானாலும் நடிப்பார். அவர் தான் இந்தப் படத்தின் ஆன்மா. இவருடன் அனகா, ஸ்வாசிகா, ஷிவதா, உன்னிமாயா பிரசாத் போன்ற கேரளா கலைஞர்கள் நடித்துள்ளனர். மேலும் நான் கேட்டுக் கொண்டேன் என்பதற்காக ஒரு சிறப்பு தோன்றத்தில் வந்து நடித்துக் கொடுத்தார் என் நண்பர் அஜூ வர்கீஸ். அவர் இங்கு அவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்த போதும் எனக்காக வந்து சின்ன ரோலில் நடித்து, அதற்கு பணம் கூட வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்கு நன்றி.

Karuppu

கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நிறைய கனெக்ஷன் உண்டு. சமீபத்தில் எங்கள் ஊரில் நிறைய கட்சிகளில் இருந்து, நிறைய பேர் CM ஆக முயற்சித்தார்கள். உங்கள் ஊரில் ஒரே கட்சியில் இருந்து நிறைய பேர் CM ஆக முயற்சிக்கிறார்கள். எங்களுக்கு நல்ல CM கிடைத்துவிட்டார். சீக்கிரம் உங்களுக்கும் நல்ல CM கிடைக்கட்டும். இந்த இரண்டு மாநிலங்களுக்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமை சூர்யா சார் மீதான அன்பு. சூர்யா சார் கேரளாவுக்கும் மட்டுமல்ல எனக்கும் மிக ஸ்பெஷல். எனக்கு ஓக்கே சொன்னது தாண்டி, படப்பிடிப்பு நடக்க, இசை வெளியீடு, ப்ரீ ரிலீஸ் என ஒவொன்றும் நடக்க அவர்தான் காரணம். இந்தப் படத்தை எடுக்க உதவிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி." என்றார்.