Sivakarthikeyan Seyon
கோலிவுட் செய்திகள்

சேயோனில் விருமாண்டி கனெக்ட்?| Seyon | Sivakarthikeyan | Virumaandi

மதுரையில் துவங்கிய இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

Johnson

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கும் படம் ‘சேயோன்’. இதில் நாயகியாக பாக்யஸ்ரீ நடிக்கிறார். `தாய் கிழவி' என்ற மிகப்பெரிய ஹிட் படத்தைக் கொடுத்த சிவக்குமார் அடுத்து இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது எழுந்துள்ளது. மதுரையில் துவங்கிய இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் இன்று துவங்கி உள்ளது. நேற்று சென்னையில் இருந்து படப்பிடிப்புக்காக மதுரைக்குக் கிளம்பினார் சிவகார்த்திகேயன். கதை அடுத்த அத்தியாயத்திற்கு முன்னேறுவதோடு, பல முக்கியக் காட்சிகள் இந்தப் படப்பிடிப்பில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வீடியோவில், "ஆடி வெள்ளி பூத்திருச்சு.. உச்சி பூச காத்திருக்கு.. ஏத்துக்கிட்டு வெளிய வா வெளிய வா வெளிய வா" என கமல்ஹாசன் நடித்த விருமாண்டி படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் விருமாண்டி படத்தின் கனெக்ட் இருக்கிறது என்ற ஒரு தகவலும் இருக்கிறது. ‘சேயோன்’ திரைப்படத்துக்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பாக கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.