Vijay Jana Nayagan
கோலிவுட் செய்திகள்

விஜயின் `ஜனநாயகன்' First Single Update! | Vijay | Jana Nayagan

தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினம் அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இதற்கடுத்து இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

Johnson

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசி படமாக உருவாகி வரும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினம் அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. இதற்கடுத்து இப்படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தது. கரூர் துயர சம்பவத்திற்கு முன்பு வரை, ஜனநாயகன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வர இருப்பதாக சொல்லப்பட்டது.

இப்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் உலவி வருகிறது. நவம்பர் முதல் வாரத்தில் ஜனநாயகன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இப்பாடலின் பெயர் `தளபதி கச்சேரி' எனவும் இதனை விஜயே பாடியுள்ளார் என்றே சில மாதங்கள் முன்பு தகவல் வந்தது. இந்தப் பாடல் முதல் பாடலாக வருகிறதா என்பது உறுதியாக தெரியவில்லை. இப்போதைக்கு ஜனநாயகன் முதல் சிங்கிள் வருவது தற்போதைய தகவலின் படி கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.