Vijay Jana Nayagan Audio Launch
கோலிவுட் செய்திகள்

விஜயின் கடைசி குட்டி ஸ்டோரி மலேசியாவில்! | Jana Nayagan Audio Launch | Vijay

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கு கிட்டத்தட்ட 60 ஆயிரம் இருக்கைகள் கொண்டது. இப்போது இந்த Bukit Jalil Stadium கிட்டத்தட்ட 85 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இடம் என சொல்லப்படுகிறது.

Johnson

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் `ஜனநாயகன்'. விஜயின் கடைசி படமாக உருவாகி வரும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் மேனன் எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தினம் அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ம் தேதி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் நவம்பர் 8ம் தேதி தளபதி கச்சேரி என்ற முதல் சிங்கிள் வெளியானது. இப்பாடலை அனிருத், அறிவு உடன் இணைந்து விஜய் பாடியிருந்தார். இந்தப் பாடல் பரவலான வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் `ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்த இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27ம் தேதி, மலேசியா, கோலாலம்பூரில் Bukit Jalil Stadiumல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN. விளையாட்டு போட்டிகள், பிரம்மாண்ட இசைக் கட்சேரிகள், கலை விழாக்கள் என பல நிகழ்வுகள் நடைபெற்ற இந்த இடத்தில் இளையராஜாவின் `Raaja Rhapsody' என்ற இசைக் கட்சேரி நடைபெற்றது. இதே அரங்கில் `லியோ' படத்தின் இசை வெளியீட்டை நிகழ்த்த திட்டமிட்டது படக்குழு. ஆனால் அப்போது இந்த இடத்தில் வேறு ஒரு நிகழ்ச்சி நடந்ததால், நிகழவில்லை. இதற்கு முன்பும் சில தமிழ் படங்களின் நிகழ்வுகள் நெளிநாடுகளில் நடைபெற்றுள்ளன. GVM இயக்கத்தில் சிம்பு நடித்த `விண்ணைதாண்டி வருவாயா' இசை அறிமுக விழா 2010ல் லண்டனில்  BAFTA Hallல் நடைபெற்றது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த `2.0' படத்தின் இசையவெளியீட்டு விழா 2017ல் துபாயில் Burj Parkல் நடைபெற்றது. இந்தப் பட்டியலில் இப்போது விஜயின் `ஜனநாயகன்' படமும் இடம் பிடித்துள்ளது. 

வழக்கமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தான் பிரம்மாண்டமான படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெறும். அது கிட்டத்தட்ட 60 ஆயிரம் இருக்கைகள் கொண்டது. இப்போது இந்த Bukit Jalil Stadium கிட்டத்தட்ட 85 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இடம் என சொல்லப்படுகிறது. விஜயின் இசை வெளியீட்டுவிழா என்றாலே விஜயின் பேச்சும் குட்டிக் கதையும் தான் ஸ்பெஷலே. இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த முறை கடைசியாக ஒரு குட்டிக் கதை மலேசியாவிலிருந்து ஒலிக்கப் போகிறது.