தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ ஜூலை 23 வெளியீட்டை முன்னிட்டு பேட்டிகளில் பேசுகிறார். பிரகாஷ் ராஜ் பல மேடைகளில் விஜயை கடுமையாக விமர்சித்த மறுநாள், இருவருக்கும் காம்பினேஷன் காட்சி இருந்தது. தளத்தில் விஜய் ஓடிவந்து பிரகாஷ் ராஜை கட்டி அணைத்தார். அரசியல், சினிமா வேறு எனும் தெளிவு இருவரிடமும் இருப்பதை வினோத் எடுத்துக்காட்டுகிறார்.
தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `ஜனநாயகன்'. இப்படம் ஜூலை 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் தொடர்பாக பேட்டிகளை அளித்து வருகிறார். அதில் நடிகர் பிரகாஷ் ராஜ் பல மேடைகளில் விஜயை விமர்சித்திருக்கிறார். படப்பிடிப்பில் அவர்களுக்குள் என்ன மாதிரியான மன நிலை இருந்தது என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன வினோத் "அவங்க செட்ல ரொம்ப செல்லம் தான். விஜய் சாரிடம் அந்த தெளிவு இருக்கிறது. இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், பிரகாஷ் ராஜ் சார் அன்று இரவு விஜய் சாரை விமர்சனம் செய்கிறார். அடுத்த நாள் காலை அவருக்கும் விஜய் சாருக்கும் காமினேஷன் காட்சி. இவர்கள் இருவரும் எப்படி பேசிக் கொள்வார்கள் என எனக்குள் ஒரு சங்கடம் இருந்தது.
ஆனால் விஜய் சார் வந்ததும், அங்கு அமர்ந்திருந்த பிரகாஷ் ராஜ் சாரிடம் குடுகுடுவென ஓடிவந்தார். இரண்டு பேரும் கட்டி அணைத்துக் கொண்டார்கள். அரசியல் வேறு சினிமா வேறு என்ற புரிதல் அவர்களுக்குள் தெளிவாக இருக்கிறது. நாளைக்கே விஜய் சாரின் கொள்கைகளில் ஏதாவது உடன்பாடு வந்தால், பிரகாஷ் ராஜ் சார் பாராட்டுவார். அவரும் திறந்த மனதுடன் நடந்து கொள்பவர் தான்." என்றார்.